கோவையில் மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி வந்த வாலிபர்கள் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார்.
கோவை: கோவையில் மது அருந்திக் கொண்டே கார் ஓட்டி வந்த வாலிபர்கள் ஏற்பட்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்துள்ளார்.
கோவை அவினாசி சாலையில் இன்று காலை கார் ஒன்று அதிவேகமாகச் சென்றது. அதில் மூன்று வாலிபர்கள் மது அருந்திக் கொண்டே வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், கார் லட்சுமிமில்ஸ் சந்திப்பு பகுதியில் சென்ற போது முன்புறமாக சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி படுகாயமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குல் சிகிச்சைக்காக அனுப்பினர். இந்த நேரத்தில் காரில் இருந்த இரண்டு வாலிபர்கள் தப்பியோடிய நிலையில் ஜெகன் என்ற கல்லூரி மாணவர் மட்டும் பொதுமக்களிடையே பிடிபட்டார்.
ஜெகனுக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தப்பியோடிய இருவரும் கரூரை சேர்ந்த அசோக் மற்றும் கோவை சேர்ந்த நந்து என்பதும், மூன்று பெரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.