திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில் இருசக்கர வாகனங்கள் ஹ்டீயில் கருகி சேதமடைந்தன.
திருப்பூர்: திருப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டதில் இருசக்கர வாகனங்கள் ஹ்டீயில் கருகி சேதமடைந்தன.
திருப்பூர் ராயபுரம், அணைமேடு பகுதியில் சின்னசாமி என்பவருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு அந்த குடியிருப்பு பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குடியிருப்புக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஏழு இருசக்கர வாகனங்கள் தீயில் கருகி சேதமடைந்தன.
மேலும், கேசவன் என்பவரது வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு கிராம் நகைகள் கொண்ட பெட்டிகள் சேதமடைந்தன. விபத்து குறித்து தகவலறிந்து வந்த வடக்கு தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.