கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் இரண்டாவது வாரமாக மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.
கோவை: கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் இரண்டாவது வாரமாக மியாவக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர்.

வெள்ளலூர் குளக்கரையில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரம் நாடும் பணியினை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிறன்று நடைபெற்ற இந்த நிகழ்வு இன்றும் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு வெள்ளலூர் குளக்கரையை சுற்றி மரங்களை நடவு செய்தனர்.

இந்த மரக்கன்றுகளுக்குக் காய்கறி சந்தையிலிருந்து எடுத்து வரப்பட்ட ஒரு டன் அளவுள்ள காய்கறி கழிவுகளுடன் மாட்டுச்சானத்தை கலந்து தயாரிக்கப்பட்ட உரம் பயன்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பைச் சேர்ந்த மற்றொரு குழுவினர் சித்திரைச்சாவடி வாய்க்காலில் குளங்களுக்கு நீர் வரும் வழித்தடம் பற்றிய கள ஆய்வில் ஈடுபட்டனர்.