திருச்சி சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வாலிபருக்கு முதலுதவி அளித்து உயிர் பிழைக்கச் செய்துள்ளார் அவசரக்கால மீட்புக் குழுவைச் சேர்ந்த மாணவர்.
கோவை: திருச்சி சாலையில் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய வாலிபருக்கு முதலுதவி அளித்து உயிர் பிழைக்கச் செய்துள்ளார் அவசரக்கால மீட்புக் குழுவைச் சேர்ந்த மாணவர்.
திருச்சி சாலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் இரண்டு வாலிபர்கள் சாலையோரம் விழுந்து கிடந்தனர். அதில் ஒருவர் சுயநினைவின்றி இருந்தார்.
அப்போது அவ்வழியாகச் சென்ற அவசரக்கால மீட்புக்குழுவில் பயிற்சி பெற்ற அல் அமீன் என்ற வாலிபர் சி.பி.ஆர். சிகிச்சை அளித்து முதலுதவி செய்தார். தொடர்ந்து விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை காப்பாற்றிய அல் அமீனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.