சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு ஆர்வமுள்ள பொதுமக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
கோவை : சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு ஆர்வமுள்ள பொதுமக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையானது (இ.எப்.ஐ.,), பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குளச்சவாரியை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கோவையில் உள்ள முக்கிய ஏரிகளில் கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 70 பேர் கலந்து கொண்டனர். சுமார் 3 மணிநேரம் நடந்த செல்வம்பதி குளத்தில் தொடங்கிய இந்த சவாரி, முத்தன்னண் குளம், நரசம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வசிந்தாமணி குளத்தில் முடிவடைந்தது. இந்த சவாரியின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒன்றிப் போகும், புவியியல், நீர் இயல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.