பிப்.,12-ம் தேதி முதல் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

டேங்கர் லாரி உரிமையாளர்கள் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கான டெண்டர் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை மண்டல வாரியாக டெண்டர் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்தந்த மாநிலங்களில் புதியதாக டெண்டர் நடத்தப்படும் என்றும், அதில் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. டெண்டர் தொடர்பான புதிய அறிவிப்பைத் திரும்ப பெறாவிட்டால் வேலைநிறுத்தம் செய்யப்படும் எனவும் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கக் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், மத்திய அரசின் புதிய டெண்டர் முறையைக் கைவிட வேண்டும், கடந்த காலங்களில் நடைபெற்றது போலவே டெண்டர் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 12-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டது.

திட்டமிட்டபடி, டேங்கர் லாரிகளின் போராட்டம் நடைபெற்றால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...