ஆணவக் கொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் தந்தை உயிரிழப்பு : உடலை வாங்க மறுப்பு

பழனியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் தந்தை தற்போது உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து உள்ளனர்.

பழனியில் ஆணவக்கொலை செய்யப்பட்ட முத்துகுமாரின் தந்தை தற்போது உயிரிழந்த நிலையில், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து உள்ளனர்.

 

பழனியில் கடந்த 2014ஆம் ஆண்டு முத்துகுமார் என்பவர் வேறுபிரிவினரைச் சேர்ந்த பெண்ணை காதலித்து வந்தார். இதனால், அவரை பெண்ணின் உறவினர்கள் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கொடைக்கானலில் பணியில் இருந்த முத்துகுமாரின் தந்தை பரமசிவம் நினைவு இழந்து கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். பரமசிவத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.  

இதனிடையே, முத்துக்குமார் ஆணவ கொலை வழக்கை எவிடென்ஸ் அமைப்பின் கதிர் நடத்தி வருகிறார். தற்போது, பரமசிவத்தின் மர்ம மரணத்தின் பின்னணி கண்டறியப்பட வேண்டும் என அவர் வேண்டுகோள் வைத்து உள்ளார். பிண கூராய்வினை வீடியோ எடுக்க வேண்டும், இரண்டு மருத்துவர்கள் அதில் ஈடுபட வேண்டும், மருத்துவ பரிசோதனை அறிக்கை உடனடியாக வெளியிடப் படவேண்டும், குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் எனக் கூறி அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து உள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...