'வண்டியை நிறுத்த இடமில்லை, ரயிலைப் பிடிக்க நேரமில்லை' கோவை ரயில் பயணிகளின் தவிப்பு

கோவை மத்திய ரயில் நிலையத்தின் பின்புறம் இயங்கி வந்த இரண்டு சக்கர வாகன நிறுத்தம் திடீரென கடந்த வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கோவை : கோவை மத்திய ரயில் நிலையத்தின் பின்புறம் இயங்கி வந்த இரண்டு சக்கர வாகன நிறுத்தம் திடீரென கடந்த வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.



தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு நாள்தோறும் மக்கள் வேலைக்காக ரயிலில் சென்று வருகின்றனர். பேருந்து கட்டணம் உயர்வுக்குப் பிறகு ரயிலை அதிக அளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அவ்வாறு, கோவையிலிருந்து செல்லும் பயணிகள் பெரும்பாலும் தங்கள் இருசக்கர வாகனத்தை ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு அதன் பின் ரயிலில் செல்வார்கள். 

இந்நிலையில், கோவை மத்திய ரயில் நிலைய பின்புறம் இயங்கி வந்த இருசக்கர வாகன நிறுத்தம் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமலும், மாற்று ஏற்பாடுகள் செய்யாமலும் திடீரென கடந்த வியாழக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால் வாகனத்தை எங்கு நிறுத்துவது என தெரியாமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  இதன் காரணமாக ரயில் நிலையத்தின் முன்பகுதியில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.



ரயில் நிலையத்தில் 4 மணி நேரம் இருசக்கர வாகனம் நிறுத்த ரூ.10 என்றும் அதற்கு மேல் சென்றால் ரூ.15 என்றும் 24 மணி நேரத்திற்கு ரூ.20 என்றும் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே, இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தனியார் வாகன நிறுத்தங்கள் அதிக அளவில் கட்டணங்கள் வசூலிப்பதாகவும் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ரயில் பயணியான ரகுமான் என்பவர் கூறுகையில், "கோவை டவுன் பகுதியிலிருந்து வரும் நான் பொள்ளாச்சியில் பணிபுரிந்து வருகிறேன். ரயில் நிலையத்தில் தற்போது இருசக்கர வாகனம் நிறுத்த இடமில்லாத காரணத்தினால் ஐந்து முக்கு பகுதியில் நிறுத்திவிட்டு நடைப்பயணமாக ரயில்நிலையம் வருகிறேன் இதனால் ரயிலை பிடிக்க தாமதமாகிறது." என்றார்.

கோவை மத்திய ரயில் நிலையத்தின் பின்புறம் பார்சல் சர்விஸ் இயங்கி வருகிறது. மேலும் மல்டிலெவெல் பார்கிங் சிஸ்டமும் ரயில் நிலையத்தில் அமைக்கப்படவுள்ளது. பார்சல் சர்வீஸ் இடநெருக்கடியில் சிக்கி தவிப்பதால் இந்த இருசக்கர வாகன நிறுத்தம் ரத்து செய்யப்பட்டு அந்த இடத்தில் மல்டிலெவெல் பார்கிங் மற்றும் பார்சல் சர்விஸ் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில்நிலைய விரிவாக்கப் பணிக்காக வாகன நிறுத்தம் இடத்தை ரத்து செய்யாதது தவறில்லை ஆனால் அதற்கு மாற்று ஏற்பாடு செய்யாமல் செய்தது தான் தவறு என மற்றொரு பயணி தெரிவித்தார்.

இதுகுறித்து சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வெங்கடேஷ் கூறுகையில், "பார்சல் சர்விஸ் இடநெருக்கடியில் இயங்கி வருவதாலும் இருசக்கர வாகன நிறுத்தத்தில் ஒப்பந்ததாரர் மீது புகார்கள் வந்த காரணத்தினாலும் கடந்த வியாழக்கிழமை அன்று இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அதன் அருகிலேயே மல்டிலெவெல் பார்கிங் சிஸ்டம் அமைக்கப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது," என்றார்.

இருசக்கர வாகனம் நிறுத்த மல்டிலெவல் பார்க்கிங் அமைப்பதற்கு முன்னதாக, தற்காலிகமாக பார்கிங் செய்வதற்கான இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...