கூடலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்க தோட்டக்கலைத்துறை முயற்சி

நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் விலங்குகள், பறவைகள் போன்று, வண்ணத்துப்பூச்சிகளும் அதிகளவில் காணப்படுகிறது. சீசன் காலத்தில் விவசாய தோட்டம், குடியிருப்பு பகுதிகளில் அவற்றின் அழகை ரசிக்க முடியும். வண்ணத்துப்பூச்சிகளால் பூக்களில் அதிக மகரந்த சேர்க்கை நடந்து, விவசாயத்தில் விளைச்சலும் அதிகம் கிடைப்பதால், விவசாயிகளின் நண்பனாகவும் உள்ளது.

நீலகிரி : நீலகிரி மாவட்ட வனப்பகுதியில் விலங்குகள், பறவைகள் போன்று, வண்ணத்துப்பூச்சிகளும் அதிகளவில் காணப்படுகிறது. சீசன் காலத்தில் விவசாய தோட்டம், குடியிருப்பு பகுதிகளில் அவற்றின் அழகை ரசிக்க முடியும். வண்ணத்துப்பூச்சிகளால் பூக்களில் அதிக மகரந்த சேர்க்கை நடந்து, விவசாயத்தில் விளைச்சலும் அதிகம் கிடைப்பதால், விவசாயிகளின் நண்பனாகவும் உள்ளது.



சீசன் காலத்தில் கூடலூர், முதுமலை புலிகள் காப்பகப்பகுதியில் காலை நேரத்தில் ஆயிரக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் தினமும் கூட்டம் கூட்டமாக பறந்து செல்லும். இவற்றின் அழகை சுற்றுலா பயணிகள் ரசிப்பதுடன், புகைப்படங்களை எடுத்து செல்வர். எனவே, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கூடலூரில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தினர். 



பூங்கா

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தோவலா அரசு தோட்டக்கலைப் பண்ணையில் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டது. இப்பூங்காவை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2015-ம் ஆண்டு திறந்து வைத்தார்.

இப்பூங்காவுக்காக 0.25 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வண்ணத்துப்பூச்சிகளின் உணவு மற்றும் இனப்பெருக்கம், முட்டையிடுதல் ஆகியவற்றிற்கான மலர் செடிகள் வளர்க்கப்பட்டு சீரான வெப்பநிலையும் குடிலில் ஏற்படுத்தப்பட்டுள்ளது . 

பிடித்த செடிகள் 

வண்ணத்துப்பூச்சிகள் தும்பை, சங்கு வகைகளை சார்ந்த செடிகளை அதிகளவில் நாடி வருகின்றன. இதையறிந்து கூடலூர் ஜீன்பூல் தாவர மையத்தில், சோதனை முறையில் குரோடோலேரியா லாஞ்டெஸ் செடிகளை வளர்க்கப்படுகின்றன. சீசன் காலத்தில் இந்த செடிகளில் கூட்டம் கூட்டமாக வண்ணத்துப்பூச்சிகளைக் காண முடியும். 

இதனால், இந்த செடிகள் பூங்காவில் வளர்க்கப்படுகின்றன. 

இது தொடர்பாக, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் கூறுகையில், "தேவாலா தோட்டக்கலை பண்ணையில் ஆண்டு முழுதும் வண்ணத்துப்பூச்சி வரவழைக்கும் வகையிலும், சுற்றுலா பணிகளை கவரும் வகையிலும் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 

வண்ணத்துப்பூச்சிகளைக் கவர குரோடோலேரியா லாஞ்டெஸ் உட்பட 12 வகையாக செடிகள் வளர்க்கப்படுகின்றன. சீசன் காலத்தில் வண்ணத்துப்பூச்சி இந்த செடிகளில் முட்டையிட்டு, அவை வளர்ந்து வண்ணத்துப்பூச்சிகளாக இடம் பெயர்ந்து செல்கின்றன. இந்த பூங்காவை சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில், நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. 

 

மேலும், பண்ணையில் தேயிலை, சில்வர் ஓக், பாக்கு, குருமிளகு, ஜாதிக்காய், கிராம்பு நாற்றுகள் மலிவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் இந்தப் பூங்கா பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...