மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு : தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை

9 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கோவை : 9 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தந்தை உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் யேசுதாஸ் (57). இவருக்கு 9 வயதுடைய மகள் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய யேசுதாஸ், கடந்த 2 ஆண்டுகளாக தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், மதுவுக்கு ஆசைப்பட்டு, நண்பர் பிரேம்குமார் என்பவரிடமும், தனது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இவர்கள் இருவரும் தொடர்ந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோரின் ஆசைக்கும் சிறுமி சிக்கித் தவித்து வந்துள்ளார். 

இந்தத் தொந்தரவுகளை தாங்க முடியாத சிறுமி, ஒருகட்டத்தில் இது தொடர்பாக, தனது பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், குழந்தைகள் நல வாரியத்திற்குத் தகவல் தெரிவித்து, காப்பகத்தில் சேர்க்க உதவி செய்தார். தனக்கு நேர்ந்த சம்பவங்களால் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி, சுமார் 2 மாதங்களாகப் பேச முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், 02.01.2015 ஆம் தேதியன்று காப்பகம் மற்றும் குழந்தைகள் நலவாரியம் சார்பில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில், சிறுமியின் தந்தை யேசுதாஸ் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு கோவை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிகள் நால்வருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கினார்.  

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...