ஜெ., விசாரணை ஆணையம் செயல் இழந்துவிட்டது : தினகரன் ஆதரவாளர்கள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செயல் இழந்து விட்டதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவை : ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் செயல் இழந்து விட்டதாக டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

டிடிவி தினகரன் அணியின் சார்பில் கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தினகரன் ஆதரவாளர்கள் புகழேந்தி மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் இன்று கோவை வந்தனர். காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஒட்டலில் இருவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அவர்கள் கூறியதாவது :- கோவையில் காவல்துறை மூலம் அறிவிக்கப்படாத எமர்ஜென்ஸி இருப்பதைப் போல இருக்கின்றது. கூட்டம் நடத்துவதற்கு கூட காவல்துறை அனுமதி மறுக்கின்றது. உள்ளுர் அமைச்சர் வேலுமணியின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகின்றது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவைக் கொன்றதற்கு ஆதாரம் இருப்பதாக சொன்ன மனோஜ் பாண்டியன், பி.எச்.பாண்டியன் ஆகியோரை ஏன் விசாரணை ஆணையம் அழைத்து விசாரிக்கவில்லை. அதேபோல, தர்மயுத்தம் நடத்திய ஓ. பன்னீர் செல்வத்தையும் ஏன் அழைத்து விசாரணை ஆணையம் விசாரிக்கவில்லை. மருத்துவமனைக்கே போகாத தீபா, மாதவன், கார் ஓட்டுநர் போன்றவர்களை அழைத்து விசாரணை ஆணையம் விசாரிக்கின்றது. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்காக அமைக்கப்பட்ட ஆணையம் செயல் இழந்து விட்டது. 

.

நீட் தேர்விற்காக அ.தி.மு.க., எம்.பி.கள் போராட்டம் நடத்த வேண்டும். அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களில் ஒரு சிலரை தவிர வேறுயாரும் சசிகலா, தினகரன் குறித்து தவறாகப் பேசுவதில்லை. அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கூட இவர்களைத் தவறாக பேசுவதில்லை. விரைவில் மூன்றாவது முதலமைச்சரையும் சசிகலா தேர்வு செய்வார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆட்சி பிடிக்காததால், இயற்கை அவர்களுக்கு ஒத்துழைக்கவில்லை. கோவில்களில் தொடர்ந்து அசம்பாவிதம் ஏற்படுகின்றது.  

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி இன்றைய ஆட்சியாளர்களைப் பார்த்து சொன்ன "இம்போடன்ட்" என்ற வார்த்தையை சொல்லிய விஷயத்திற்காக  குருமூர்த்திக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும். துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரன் பாராட்டு விழா நடத்த அனுமதிக்காததால் கோபமாக இருக்கின்றோம். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...