மத்திய அரசைக் கண்டித்து பக்கோடா விற்ற காங்கிரஸ் கட்சியினர்

கோவையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு அங்கி அணிந்து, காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கோவையில் மத்திய அரசைக் கண்டித்து கருப்பு அங்கி அணிந்து, காங்கிரஸ் கட்சியினர் பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



வேலையே இல்லாமல் இருப்பதை விட பக்கோடா விற்பதும் ஒரு வேலைதான் என்று மாநிலங்களவையில் பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷா தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். இதேபோல, பிரதமர் மோடி சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒரு நபர் பக்கோடா விற்றால் தினமும் வீட்டுக்கு அன்று மாலை ரூ. 200 எடுத்துச் செல்கிறார் எனவும், அப்படியானால் அதுவேலை என்று எடுத்துக்கொள்ளப்படுமா..? இல்லை..? என்று பதில் கேள்வி எழுப்பினார். பிரதமரின் இந்தக் கருத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. 



இதன் ஒருபகுதியாக கோவை காந்திபுரம் நகர் பேருந்துநிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து பட்டதாரிகள் அணியும் கருப்பு அங்கி அணிந்து பக்கோடா விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலைவாய்ப்பை உருவாக்காமல், பட்டதாரி இளைஞர்களை பக்கோடா போடச் சொல்லிய பிரதமர் மோடியைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியைக் கண்டித்து பதாகைகள் ஏந்தியவாறு, பக்கோடாவை சாலையில் சென்றவர்களுக்கு வழங்கினர். இதனையடுத்து, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் போலீசார் கைது செய்தனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...