கோவை, நீலகிரி மாவட்டங்களில் பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் திடீரென பெய்த பரவலான மழையால், விவசாயிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


நீலகிரி : கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பெய்து வரும் பரவலான மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 



கடந்த இரு மாதங்களாக நீலகிரியில் கடும் பனிபொழிவு நிலவி வந்தது. இதனால், வனங்களில் பசுமை குறைந்து வறட்சி தலைதூக்கியது. விவசாய நிலங்களிலும் வறட்சி ஏற்பட்டதால் விவசாயிகள் மழையை எதிர் நோக்கி காத்திருந்தனர். கடந்து இரு தினங்களுக்கு முன்பு இரவு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மதியம் உதகை, கோத்தகிரி, முதுமலை பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் கன மழை பெய்ததால், வறட்சியின் பிடியிலிருந்த முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வந்த வனத் தீ அபாயம் நீங்கியது. 

முதுமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகள், மசினகுடி வனப்பகுதியிலும் மழை பெய்தது. இந்த மழை காரணமாக பூமி நனைந்து பகல் நேரத்தில் நிலவி வந்த வெட்பம் தணிந்து ரம்மியமான காலநிலை நிலவியது. இதை சுற்றுலா பயணிகள் வெகுவாக ரசித்தனர். மழை பெய்ததால், விவசாயிகள் விதைப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை தொடரும் பட்சத்தில் நீர்த்தேக்கங்களில் நீர்இருப்பு அதிகரித்து, கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதேபோல, கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் பரவலான மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...