பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - வனத்துறை அமைச்சர்

பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 



நீலகிரி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களை அவர் கூறுகையில், " டான்டீ தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரைக் கொண்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. தொழிலாளர்களின் குடியிருப்பு பிரச்சினைகள் மற்றும் இதர பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாக தீர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

 

விரைவில், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். சேரம்பாடி தனியார் எஸ்டேட்டில் அயனிபாலா மரங்கள் வெட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த மரங்கள் இயற்கையாக வளர்ந்தவை என்பதால், அந்த மரங்களை வெட்டத் தடை விதிக்கப்பட்டது. 

நீலகிரி மாவட்டத்தில் மனித விலங்கு மோதல் அதிகரித்துள்ளது. விலங்குகளால், மனிதர்களுக்கும், மனிதர்களால் விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது விலங்குகள் தாக்கி, உயிரிழப்பவர்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழிகள் வெட்டப்படுகின்றன. கரடி, சிறுத்தைகள் ஊருக்குள் வராமல் தடுக்க கூண்டுகள் வைத்துப் பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Newsletter

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...