கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4-க்கான தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கோவை : கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4-க்கான தேர்வுக்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் பேசுகையில், அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்தி வருகின்றது. அதன்படி, வரும் ஞாயிறு (பிப்.,11) அன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு நடைபெறுவுள்ளது. இத்தேர்வில், கோவை மாவட்டத்தில் மட்டும் உள்ள 153 மையங்களில் 71,849 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். இத்தேர்வினை கண்காணிக்க 68 மொபைல் யூனிட்களும், 20 பறக்கும் படை குழுவும், 245 அறை கண்காணிப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், முறைகேடுகள் ஏதும் எற்படாத வகையில் தேர்வினை முழுமையாகக் கண்காணிக்க ஒளிப்பதிவு செய்யப்பட உள்ளது.
மேலும், தேர்வாளர்கள் சிரமமின்றி தேர்வெழுதப் பேருந்து வசதி, பாதுகாப்பு வசதி, தளவாடங்கள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்வசதி போன்ற அடிப்படை வசதிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கடந்த முறை போலவே எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வகையில் தேர்வினை நடத்தும்படி, கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் என அனைவரும் சிறப்பாக பணியாற்றிட கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜன், வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.