பல்லடத்தில் முள்காட்டில் பயங்கர தீவிபத்து : போலீஸார் விசாரணை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முள்காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தன.

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே முள்காட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான மரங்கள் எரிந்து சேதமடைந்தன. 

பல்லடம் மங்கலம் சாலை தெற்குப்பாளையம் பிரிவு அருகே திருப்பூரைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (58). இவருக்குச் சொந்தமான 8 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், கடும் வறட்சி காரணமாக விவசாயம் ஏதும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், விவசாய நிலத்தைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள், முட்கள் முளைத்து புதர்போல் மண்டியுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென அந்தக் காட்டில் தீ மளமளவெனப் பற்றி எரிந்தது. இதில், சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏராளமான முள் மரங்கள், புற்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.



இது குறித்து அப்பகுதியினர் பல்லடம் தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...