மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும், உயர்கல்வி பயிலத் துறை அனுமதி கோரி விண்ணப்பித்தும் அனுமதி வழங்காத நிலையில், உயர் கல்வி பயின்றவர்களுக்கு அரசாணையின்படி பின்னேற்பாடுகள் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.