கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் இருந்து கட்டுக்கட்டாக ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அள்ளிச்சென்றனர்

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நள்ளிரவு வரை சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அள்ளிச்சென்ற சம்பவம் பரபரப்பைஅதிகப்படுத்தியுள்ளது.

கோவை: கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நள்ளிரவு வரை சுமார் 9 மணி நேரம் நடைபெற்ற ஆய்வின் முடிவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு துறையினர் அள்ளிச்சென்ற சம்பவம் பரபரப்பைஅதிகப்படுத்தியுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் லஞ்சம் வாங்கியதாக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று கூடிய ஆட்சி மன்ற குழுவினர் பேராசிரியர் தர்மராஜை பணியிடை நீக்கம் செய்தனர்.

மேலும் பல்கலைகழகத்தின் செயல்பாடுகளை தடையின்றி மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட நிர்வாக குழுவினை ஏற்படுத்தினர். இன்று கூடிய இந்த நிர்வாக குழு தொலைதூர கல்வி இயக்குனர் மதிவாணனை பணியில் இருந்து விடுவித்ததுடன், அந்த பணிக்கு பல்கலைகழக புள்ளியல் துறை பேராசிரியர் சுரேஷ் நியமிக்கப்பட்டார். 

இதனிடையே லஞ்ச ஓழிப்புதுறை டி.எஸ்.பி தட்சிணாமூர்த்தி, டி.எஸ்.பி ராஜேஷ் ஆகியோர் இன்று மாலை 4 மணிக்கு துணைவேந்தர் கணபதியின் நேர்முக உதவியாளர் சுல்தான் பேகம், பதிவாளர் வனிதாவின் நேர்முக உதவியாளர்கள் ராஜன், சங்கர் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். 

மாலை 4 மணிக்கு துவங்கிய விசாரணை நள்ளிரவு தாண்டி இரவு ஒரு மணி வரையில் நீண்டது. 2016-ம் ஆண்டு போடப்பட்ட பணிநியமனங்கள் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகின்றது. பணிநியமனங்கள் தொடர்பான தகவல்களையும் , ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சேகரித்தனர். 

துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் சுல்தானா பேகம் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக துணைவேந்தர்களிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். 5 துணைவேந்தர்களின் காலங்களில் பணிபுரிந்தவர் என்பதால், சுல்தானா பேகத்திடம் விசாரணை மேற்கொண்டால் பல முக்கிய தகவல்கள் மற்றும் ஆவணங்களை பெற முடியும் என்பதால் அவரிடமும், பதிவாளர் வனிதாவின் உதவியாளர்களிடம் விசாரணையானது நடத்தப்பட்டது. 

நேற்றைய தினம் பல்கலையில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சில ஆவணங்களை பெற்று சென்ற நிலையில், இன்றும் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகின்றது. பல்கலைகழக அலுவலக ஊழியர்கள் பணி முடிந்து வெளியேறிய நிலையில் லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். 

இதையடுத்து நள்ளிரவு ஒரு மணியளவில் கட்டுக்கட்டாக ஆவணங்களை கார் மூலம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அள்ளிச்சென்றனர். இன்று (09.02.2018) துணை வேந்தரை விசாரணைக்காக போலீஸ் காவல் கோரும் மனு விசாரணைக்கு வர உள்ள நிலையில் கட்டுக்கட்டாக ஆவணங்களை போலீசார் அள்ளிசென்றுள்ள சம்பவத்தால் துணை வேந்தர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...