பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க 3 பேர் கொண்ட தற்காலிக குழு நியமனம்

துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

கோவை: துணைவேந்தர் கணபதி லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில், பாரதியார் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 



பேராசிரியர் நியமனத்துக்கு ரூ.30 லட்சம் லஞ்சமாகக் கேட்டதாக சுரேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு. அவர் பணம் பெறுவதற்கு புரோக்கர் போல் செயல்பட்டதாக பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கணபதியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தியபோது தடயங்களை அழிக்க முயன்றதாக அவரது மனைவி சொர்ணலதாவும், அவரது உறவினரும், பல்கலைக்கழக ஊழியருமான மதிவாணன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து உயர்கல்வித் துறை செயலர் தலைமையில் ஆட்சிமன்றக் குழு கூட்டம் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று கூடியது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, பல்கலைக் கழகத்தை நிர்வகிக்க முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் தலைமையில் 3 பேர் கொண்ட தற்காலிகக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் சிண்டிகேட் உறுப்பினர்களான பேராசிரியர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

கூட்டத்திற்குப் பிறகு முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் செய்தியாளர்களிடம் பேசுகையில், துணை வேந்தர் விவகாரத்தில் சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை. லஞ்ச ஒழிப்பு துறையின் நடவடிக்கையே திருப்திகரமாக உள்ளது. துணைவேந்தர்களின் முறைகேடுகளை தடுக்கும் வகையில் மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படும் முறைகளை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும். துணைவேந்தர் முறைகேடுகளை தடுக்க மேல்மட்டத்தில் இருந்தே சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். துணைவேந்தர் நியமனத்தில் அரசு மற்றும் அமைச்சர் தலையீடு இல்லை. 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து நியமிக்கப்படும் துணைவேந்தர்கள் மீது முறைகேடு புகார்கள் எழுகின்றன. அந்தப் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டியதில்லை. பல்கலைக்கழகங்களில் தணிக்கை தடைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கணபதியைத் தொடர்ந்து, லஞ்சம் பெற்ற வழக்கில் சிக்கியுள்ள பேராசிரியர் தர்மராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை இன்று தேர்வு செய்யப்பட்ட தனது தலைமையிலான நிர்வாக குழு பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும். எனது தலைமையிலான அந்தக் குழுவில் பேராசிரியர்கள் ஜெயக்குமார், திருநாவுக்கரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு நிர்வாக குழுவாக செயல்படுவர். துணைவேந்தருக்கான அதிகாரங்கள் இந்தக் குழுவிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...