சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் மொழியை நீக்கவில்லை என்றும் கோளாறு காரணமாகவே ஆங்கில மொழியில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டதாகவும் அந்த விமான நிலையத்தின் இயக்குநர் சந்திரமவுளி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பாகத் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அறிவிப்பு வெளியாகி வந்த நிலையில், இன்று வழக்கத்திற்கு மாறாக ஆங்கில மொழியில் மட்டும் அறிவிப்பு வெளியாகியது. மேலும், தமிழ் மொழியில் இனி அறிவிப்புகள் வெளியிடப்பட மாட்டாது என்று விமான நிலைய அதிகாரிகள் அறிவித்தது போன்றும் செய்திகள் வெளியாகின. இது தமிழார்வலர்களிடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், " இன்று காலையில் அதிகமான விமானங்கள் இயக்கப்பட்டதால், சென்னை விமான நிலைய பெயர்ப்பலகையில், ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு வெளியானது. மேலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான் இன்று காலை இந்தப் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது, அது சரிசெய்யப்பட்டுவிட்டது" என்று சென்னை விமான நிலையத்தின் இயக்கினர் சந்திரமவுளி தெரிவித்துள்ளார்.