தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி: தொடரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க தவறும் நகராட்சி நிர்வாகம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதால் 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. வெறிநாய்களால் தொடரும் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் வெறிநாய்கள் கடித்து குதறியதால் 7 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. வெறிநாய்களால் தொடரும் இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தாராபுரம் பகுதியில் இரச்சிமஸ்தான் நகரில் வசித்து வரும் பொன்னுசாமி, காளியம்மாள் தம்பதியினர் ஆடுகள் மேய்த்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலையில் நாய்கள் குறைக்கும் சத்தம்கேட்டு ஆட்டு கொட்டகைக்கு காளியம்மாள் சென்று பார்த்தபோது ஏழு ஆடுகள் வெறிநாய்கள் கடித்து குதறி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், பல ஆடுகள் ஆட்டு கொட்டகையிலிருந்து நாய்களுக்குப் பயந்து சிதறி ஓடியுள்ளன. காணாமல் போன ஆடுகளை அவர்கள் தேடி வருகின்றனர்.



கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெறிநாய்கடித்து 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர். நேற்று தாராபுரம் கோவில்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்து 16 ஆடுகள் பலியானது. இந்த நிலையில், இன்று இரச்சிமஸ்தான் நகரில் 7 ஆடுகள் வெறிநாய்களால் கொல்லப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தாராபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நகராட்சி மற்றும் வருவாய் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...