தள்ளுவண்டிக் கடை நடத்த அனுமதி தாருங்கள்..! - குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள்

தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க அனுமதி கோரி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க அனுமதி கோரி வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கோவை வெள்ளலூர் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டு பல்வேறு பகுதிகள் வசித்த வந்த பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2800 வீடுகளில் சுமார் 2000 வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். 



குடிசை மாற்று வாரியத்தால் வீடு ஒதுக்கப்பட்டவர்களில் சிலர் தள்ளுவண்டி கடை அமைக்க அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்று அளித்தனர். 

தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வணிகத்திற்கு கடைகள் கட்டப்பட்டுள்ளது. அந்த கடைகளுக்கு ரூ.2500 என அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வாடகைக்குத் தனியார் பெற்றுள்ளனர். இந்த குடியிருப்பில் வசிக்கும் பலர் தள்ளுவண்டிக் கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். ஆனால், வணிக வளாகங்களில் கடைகளை வாடகைக்கு எடுத்த சிலர் தள்ளுவண்டிக் கடைகள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கடைகள் அமைத்துள்ள வியாபாரிகளுக்குச் சாதகமாக பேசுகின்றனர். இங்கு வசிப்பவர்கள் ஏழ்மையான நிலையில் உள்ளதால் வெள்ளலூர் குடிசை மாற்று வாரியத்தில் தள்ளுவண்டி வியாபாரம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர். 

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...