ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று திருச்சி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சேலம் பிராந்திய ரயில்வே மேலாளர் ஸ்ரீ ஹரி சங்கர் கூறுகையில், திருச்சி, சேலம் மாவட்டங்களுக்கு இடையே பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 5-ம் தேதி முதல் இயக்கப்படும் இந்த ரயில்சேவையானது, ஞாயிற்றுக்கிழமையைத் தவிர வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்பட உள்ளன. திருச்சி - கரூர் பயணிகள் ரயில் நாமக்கல் வழியாக சேலம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில்சேவை சோதனை ஓட்டமாக 3 மாத காலம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு கூறினார்.
திருச்சி - சேலம் இடையே ரயில்சேவை:
திருச்சி - கரூர் பயணிகள் ரயில் (எண் - 76833) (நீட்டிக்கப்பட்ட சேவை) : திருச்சியில் இருந்து புறப்படும் நேரம் காலை 09.35 மணி. கரூர் சென்றடையும் நேரம் காலை 11.35 மணி.
கரூர் - சேலம் சிறப்பு பயணிகள் ரயில் (எண் - 06833) : கரூரில் இருந்து புறப்படும் நேரம் காலை 11.40. சேலத்திற்கு சென்றடையும் நேரம் பிற்பகல் 01.20 மணி.
சேலம் - திருச்சி இடையேயான ரயில்சேவை:
சேலம் - கரூர் பயணிகள் சிறப்பு ரயில் (எண் - 76833) : சேலத்தில் இருந்து புறப்படும் நேரம் பிற்பகல் 01.30 மணி. கரூர் சென்றடையும் நேரம் பிற்பகல் 03.20 மணி.
கரூர் - திருச்சி சிறப்பு பயணிகள் ரயில் (எண் - 06833) (நீட்டிக்கப்பட்ட சேவை): கரூரில் இருந்து புறப்படும் நேரம் மாலை 03.30 மணி. திருச்சிக்கு சென்றடையும் நேரம் மாலை 05.35 மணி.