கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்காக ரூ. 165.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான குடிநீர் பகிர்மான அபிவிருத்தி திட்டத்திற்காக ரூ. 165.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பில்லூர், சிறுவாணி மற்றும் ஆழியாறு நீராதாரங்கள் மூலம் கோவை மாநகராட்சிக்கு வழங்கப்படும் மொத்தம் குடிநீரின் அளவு போதுமானதாக இருந்த போதிலும் புதிதாக இணைக்கப்பட்ட குனியமுத்தூர், குறிச்சி போன்ற பகுதிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் (மேல் நிலை தொட்டிகள் மற்றும் புதிய பகிர்மானக் குழாய்கள்) போதுமானதாக இல்லை. இதனால், அந்தப் பகுதிகளில் தற்போதைய குடிநீர் விநியோக அளவு நபர் ஒருவருக்கு நாளொன்றுக்கு 70 லிட்டர் என்ற விகிதத்தில் 6 நாள் முதல் 8 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்பட்டு வருகிறது.
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சீரான கூடுதல் குடிநீர் விநியோகிக்க உள்கட்டமைப்புகள் அமைப்பது மிக அவசியமாகிறது. எனவே, உள்கட்டமைப்புகள் (மேல் நிலை தொட்டிகள் மற்றும் புதிய பகிர்மானக் குழாய்கள்) அமைக்கும் பொருட்டு இத்திட்டம் ரூ.165.43 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் பகிர்மான குழாய்கள் மூலமாக போதிய அழுத்தத்துடன் கூடுதல் குடிநீர் குனியமுத்தூரிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் என்ற விகிதத்தில் சமமாக பகிர்ந்து குடிநீர் விநியோகம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வழங்க இயலும்.
இத்திட்டத்தில், கோவைப்புதூர் பிரிவு அருகில் 35.02 எல்.பி.சி.டி. (ஒருநாளுக்கு நபருக்கு ஒருலிட்டர்) சிறுவாணி குடிநீர் எடுக்கப்பட்டு, அருகில் புதிதாக கட்டப்படவுள்ள 15.00 இலட்சம் லிட்டர் கொள்ளளவு தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியில் பெறப்பட்டு அங்கிருந்து புதிய மின் மோட்டார் மூலம் 15.20 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய்கள் வாயிலாக குனியமுத்தூர் பகுதியில் உள்ள பிரஸ் என்கிளேவ்வில் புதிதாகக் கட்டப்படவுள்ள 15.00 இலட்சம் லிட்டர் பிரதான சமநிலை தொட்டிக்கும் மற்றும் குறிச்சி பகுதியில் உள்ள பிள்ளையார்புரத்தில் புதிதாகக் கட்டப்படவுள்ள 20.00 இலட்சம் லிட்டர் பிரதான சமநிலை தொட்டிக்கும் கொண்டு செல்லப்படும்.
தற்போது, குறிச்சியில் பயன்பாட்டில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டியிலிருந்து 11.25 எல்.பி.சி.டி. ஆழியார் குடிநீர் பிள்ளையார்புரம் பிரதான சமநிலை தொட்டிக்குக் கொண்டு செல்லப்படும். மேலும், மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட மற்ற பகுதிகளான துடியலூர், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி மற்றும் காளப்பட்டி ஆகியவற்றுக்கும் இதேபோல, திட்டம் ரூ.189.57 கோடி செலவில் செயலாக்கப்படவுள்ளது. இதன் மூலம் சீரான கூடுதல் குடிநீர் வழங்கப்படும்.
குனியமுத்தூர் பகுதிகளுக்கு பிரஸ் என்கிளேவ் பிரதான சமநிலை தொட்டியிலிருந்து குடிநீர் தன்விசையாக புதிதாக அமைக்கப்படவள்ள 7 எண்ணம் மற்றும் தற்போது இயக்கத்தில் உள்ள 18 எண்ணம் மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு புதிதாக பதிக்கப்படும் 21.00 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய்கள் மூலம் அனுப்பப்படும். இந்தப் பகுதிகளின் பகிர்மான குழாய்கள் வரையறையில், தற்போது இயக்கத்தில் உள்ள 237.63 கிலோமீட்டர் நீள குழாய்களுடன், புதிதாக அமைக்கப்படவுள்ள மேல்நிலைத் தொட்டிகள் மூலம் வளர்ச்சி அடைந்த பகுதிகளுக்கும் 65.20 கிலோமீட்டர் நீளமுள்ள குழாய்கள் பதிக்கப்படவுள்ளது. மேலும், புதிதாக வீட்டு இணைப்புகள் 19584 குடியிருப்புகளுக்கும், 867 வணிக நிறுவனங்களுக்கும் அமைக்கப்படவுள்ளது என்று தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.