நடிகை சரிதாநாயர் உட்பட இருவருக்கு பிடிவாரண்ட் : கோவை நீதிமன்றம் உத்தரவு

காற்றாலை அமைத்துத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கேரள நடிகை சரிதாநாயர் உட்பட இருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை: காற்றாலை அமைத்துத் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வழக்கில் கேரள நடிகை சரிதாநாயர் உட்பட இருவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் திரைப்பட நடிகை சரிதா நாயர். இவர், கடந்த 2009-ம் ஆண்டு கோவை வடவள்ளி பகுதியில் ‘ஐ.சி.எம்.எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார். நிறுவனங்களில் காற்றாலை அமைத்துத் தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் எனபரிடம் ரூ.28 லட்சம் , ஊட்டியைச் சேர்ந்த வெங்கட்ரமணன் மற்றும் ஜோயோ ஆகியோரிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில், சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், அவரது மேலாளர் ரவி ஆகியோர் மீது போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இவ்வழக்கு விசாரணைக்காக ஆஜராகும்படி தொடர்ந்து 4 முறை சம்மன் அனுப்பியும் சரிதா நாயர் மற்றும் மேலாளர் ரவி ஆகியோர் ஆஜராகவில்லை. 

இதனால், சரிதாநாயர் மற்றும் ரவி இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தும், வழக்கினை வரும் 8-ம் தேதிக்கும் ஒத்திவைத்து நீதிபதி ராஜவேல் உத்தரவிட்டார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...