கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


கோவை: ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும், மருந்து விற்பனையில் ஈடுபட்டுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் அளவில்லாத தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள “GSR 220” என்ற புதிய விதிமுறையால் சிறிய மருந்துக் கடைகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட சில்லறை மற்றும் மொத்த மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருந்து வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் திருநாவுக்கரசு கூறுகையில், “ஆன்லைனில் தற்போது தடை செய்யப்பட்ட மருந்துகள் கூட எளிதாக கிடைத்து வருகின்றன. தள்ளுபடி என்ற பெயரில் போலி மருந்துகளும் கார்ப்பரேட் நிறுவனங்களால் விற்பனை செய்யப்படுகின்றன. இதை தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு மருத்துவமனைகளில் செயல்படும் மருந்துக் கடைகளை அணுகலாம். மேலும், ஒவ்வொரு கடை முன்பும் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸில் உள்ள தொலைபேசி எண்களை தொடர்புகொண்டு மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம்,” என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...