அவிநாசி சாலையில் ஓடும் காரில் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கோவையை அடுத்த அவிநாசி சாலையில் ஓடும் கார் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை : கோவையை அடுத்த அவிநாசி சாலையில் ஓடும் கார் தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



கோவையை சேர்ந்த தொழில் அதிபர் ஸ்ரீகேஸ், என்பவர் தனது காரை சர்வீஸ் செய்து விட்டு அவினாசி சாலையில் ஓட்டி வந்து கொண்டிருந்தார். அவிநாசி ரோடு அண்ணா சிலை அருகே கார் வந்துகொண்டிருந்த போது, காரின் பின் பகுதியில் தீ பிடித்து எரிந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கார் ஓட்டுனரிடம் தீ பற்றி எரிவதை தெரிவித்தனர்.

உடனடியாக  கார் நிறுதப்பட்டு,காரில் இருந்தவர்கள் வெளியேறியதால் அதிர்ஷ்ட வசமாக கார் ஓட்டுனர் மற்றும் ஸ்ரீகேஸ் இருவரும்  உயிர்தப்பினர். மள மள வென்று பரவிய தீயால் காரின் பின் பகுதி முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயனையப்பு துறையினர் தீயை அணைத்தனர். பெட்ரோல் கசிவினால் இந்த விபத்து ஏற்பாட்டு இருக்கலாம் என  தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பெட்ரோல் பங்க் அருகே  கார் தீ விபத்து  ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...