நீலகிரி மாவட்டம் கேத்தியில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, வீட்டின் மேல் விழுந்தது. இதில், பலர் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் கேத்தியில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, வீட்டின் மேல் விழுந்தது. இதில், பலர் படுகாயம் அடைந்தனர்.

உதகையிலிருந்து மேட்டுபாளையத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி கேத்தி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த லாரி 500 அடி பள்ளத்தில் விழுந்தது. மலைப்பகுதி என்பதால் பள்ளமான இடத்தில் இருந்த வீட்டின் மீது லாரி விழுந்தது. இதில், பலர் படுகாயம் அடைந்தனர். மேலும், லாரியில் 3 நபர்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில், பயணம் செய்த சதீஸ் தலையில் பலத்த காயம் அடைந்தார். முதலுதவிக்கு பின் கோவை மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.