பெண்ணைக் கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்த வடமாநில திருடர்கள்

அன்னூர் அருகே பெண்ணை கொலைசெய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வட மாநில தொழிலாளர்கள் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை, ஜனவரி 26

அன்னூர் அருகே பெண்ணை கொலைசெய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வட மாநில தொழிலாளர்கள் வெறிச்செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மயில்சாமி. இவரது மனைவி ராஜாமணி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள் உள்ள நிலையில் இருவரும் தங்கள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வீடு விரிவாக்கப் பணிக்காக பணிகள் மேற்கொண்டு வரும் இவர்களது வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. இதற்காக மூன்று வடமாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூவரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் இரவு பணி மேற்கொள்ள வேண்டும் என வீட்டின் உரிமையாளர்களான ராஜாமணி மயில்சாமி தம்பதியினரிடம் கூறியுள்ளனர்.

பின்னர், இரவு டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்ட வட மாநில தொழிலாளர்கள் மூவரும் இரவு 12 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணியை கதவைத் தட்டி எழுப்பி குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர். தண்ணீர் எடுக்க ராஜாமணி வீட்டினுள் சென்ற போது பின் தொடர்ந்து சென்ற தொழிலாளர்கள் அவரை ஆயுதங்களால் பயங்கரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மயில்சாமியை கட்டிவைத்து அவருக்கு மின்சாரம் கொடுத்து கொலை செய்ய முயன்றுள்ளனர்.

பின்னர் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து விட்டு ராஜாமணியின் உடலை சாக்கு மூட்டையில் அடைத்து வீட்டில் போட்டுள்ளனர். மின்சாரம் பாய்த வலியில் மயில்சாமி அலறிய சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்த போது வட மாநில கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயில்சாமியை மீட்ட கிராம மக்கள் அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அன்னூர் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலையுண்ட ராஜாமணியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...