தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் அறிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கான இலவச பயிற்சி வரும் 31-ம் தேதி நடக்கிறது.
கோவை, ஜனவரி 25

இரண்டாம்நிலை காவலர், இரண்டாம்நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்போர் ஆகிய பதவிகளுக்கு மொத்தம் 6,140 காலிப் பணியிடங்களுக்கான தேர்வு வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. வயது வரம்பு 01.07.2017 அன்று 18 வயது முதல் 24 வயதுக்குள் வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் 18 முதல் 26 வயதிற்குள்ளும், ஆதிதிராவிடர், அருந்ததியர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 29 வயதிற்கு மேற்படாதவர்களாகவும், முன்னாள் ராணுவத்தினர், மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் 45 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், ஆதரவற்ற விதவைகள் எந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்தத் தேர்விற்கு கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த எழுத்துத் தேர்விற்கு தபால் நிலையங்களில் விண்ணப்பங்கள் டிச., 28-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வரும் 27-ம் தேதி பிற்பகல் 12 மணிக்குள் உறுப்பினர் செயலர், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம், சென்னை-8 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பம் செய்தவர்களுக்கு கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலமாக வரும் 31-ம் தேதி முதல் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இலவச பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி வகுப்பில் சேர தேர்விற்கு விண்ணப்பித்த ஆதாரத்துடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒன்றுடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டும்.