கோவை விழாவின் ஒருபகுதியாக தூய்மை பணி மேற்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி மாணவர்கள்

கோவை, ஜனவரி 06

கோவையின் பெருமையை போற்றும் வகையில் கடந்த ஜனவரி 5ம் தேதி துவங்கிய கோவை விழா வரும் 12-ஆம் தேதி வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில், கலை, விளையாட்டு, இசை, இலக்கியம், உணவு முறை, தொழில்நுட்பம், மருத்துவம் என பல்வேறு துறைகளின் சார்பில் பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கோவை விழா குழுவினருடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள் இணைந்து ஸ்வச் பாரத் விழிப்புணர்வு தெரு நாடகம், விழிப்புணர்வு நடனம், விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள், திறந்தநிலை அசுத்தப்படுத்துதல் குறித்து கல்வி மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு கல்வி போன்ற தொடர்ச்சியான நிகழ்ச்சிகளை நடத்தினர்.

முன்னதாக, எஸ்.என்.ஆர் சன்ஸ் டிரஸ்ட் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ. டி. லட்சுமி நாராயணசுவாமி இந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். முதன்மை வர்த்தக அலுவலர் எல். சுவாதிராஹித், முதல்வர் மற்றும் செயலாளர் கே. கருணாகரன், இளம் இந்தியத் தலைவர்கள் பிரசன்ன மற்றும் குமரவேல் மற்றும் 200-க்கும் மேற்பட்ட என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...