குடியிருப்பு பகுதியில் நுழைந்த காட்டு யானை- பொதுமக்கள் பீதி

வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


வால்பாறை, டிசம்பர் 28

வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து யானைகள் நுழைந்து சேதம் செய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து பல மாதங்களாக காட்டு யானைகள் நுழைந்து வருகிறது. யானைகள், இரவு நேரங்களில் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைவதும் குடியிருப்புகளை இடிப்பதும், ரேசன் கடைகளை சூறையாடுவதும் வழக்கமான நிகழ்வாகி விட்டது.

இந்நிலையில், சோலையார் முதல் டிவிசனில் இன்று வழக்கம் போல் தோட்டத் தொழிலாளர்கள் காலை 7.55 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பீல்டு எண் 8-ல் மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றைக் காட்டு யானை பணிக்கு சென்று கொண்டிருந்த அழகம்மாள் (52) என்பவரை தும்பிக்கையால் தூக்கி வீசியது. இதனால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக தொழிலாளர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவரை வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



இதனிடையே, இந்தச்சம்பவம் குறித்து தகவலறிந்த மானாம்பள்ளி வனத்துறை அதிகாரிகள் சேகர், விஜயன் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் சோலையார் எஸ்டேட் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சின்கோனா, நீரார்டேம், பன்னிமேடு, பாரளை போன்ற பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...