வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில் மேம்படுத்துவது குறித்து ஆலோசனை

கோவை, டிசம்பர் 27

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுவன மேலாண்மை குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட வனஅலுவலர் ந.சதீஸ் மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழு உறுப்பினர்கள், அனைத்து திட்ட கிராம வனக்குழு உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் வனப்பகுதி மலைவாழ் கிராமங்களில், ஆட்சியர் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.



பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, மாவட்ட அளவிலான கூட்டுவன மேலாண்மை குழுவின் மூலம் வனப்பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்தல், பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காரமடை பகுதிகளில் உள்ள வனகிராமங்களான சேத்துமடை, பூச்சிமரத்தூர், நெல்லிமரத்தூர், இருளர்பதி, பாறையன்கோம்பை உள்ளிட்ட கிராமங்களில் 63 பயனாளிகளுக்கு கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளது. நம்பர் 4 வீரப்பாண்டி பகுதிக்கு அருகாமையில் பூலப்பதி கிராமத்தில் ரூ. 9.19 லட்சம் மதிப்பில் சூரியஒளியில் இயங்கும் மோட்டார் வசதி செய்யப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது.  

தமிழ்நாடு காடு வளர்ப்பு திட்டத்தின் மூலம் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ்கள் உரிய விசாரணையின் பேரில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. வெள்ளருக்கம்பாளையம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேரண், கிணறு கிராமத்தில் 400 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், புதிய நியாயவிலைக் கடை அமைக்க துரித நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்துப்பட்டுள்ளது. தேக்கம்பட்டியில் ரூ. 7.20 லட்சம் மதிப்பில் 20 சோலார் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் நெல்லிமலையில் இருந்து வரும் உபரிநீரை தடுப்பணைகட்டி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.    

தொடர்ந்து, மலைவாழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதுடன் வனவிலங்குகளால் பாதிப்பு ஏற்படாத வகையில், அகழிகள் ஏற்படுத்துதல் தொலைதூர வெளிச்சம் தரக்கூடிய டார்ச்லைட்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மலைவாழ் மக்கள் சுயசார்பு அடையும் வகையில், சிறுவன சாகுபடி மேற்கொள்ளவும், தங்களால் உற்பத்திசெய்யக்கூடிய கைவினைப் பொருட்களை சந்தைபடுத்தவும் வனஅலுவலர்கள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

இக்கூட்டத்தில், மாவட்ட கூட்டுவன மேலாண்மைகுழுவினரால் வைக்கப்படும் கோரிக்கைகள் அனைத்து உரியப் பரிசீலனைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...