உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை வரைவு மீதான ஆட்சேபனைகளைத் தெரிவிக்க உத்தரவு

கோவை, டிசம்பர் 27

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை வரைவு மீது பொதுமக்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தெரிவிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. 

தமிழ்நாடு சட்டம் 23/2017 மற்றும் தமிழ்நாடு மறுவரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின்படி 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பினை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்ட கிராம ஊராட்சி வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 

இவ்வரைவு மறுவரையறையின் மீது பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம். அவற்றை, எழுத்துப்பூர்வமாகச் சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ ஜனவரி 02 மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...