பிக்பாக்கெட் மன்னன் பிடிபட்டான்

கோவை , டிசம்பர் 24

மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் என்கிற "பிசி" ராஜன். 

பிக்பாக்கெட் அடித்து வரும் பணத்தில் ஊரைச் சுற்றித்திரிவதே இவரின் அன்றாட பணியாக இருந்து வருகிறது. 

இந்த நிலையில், பண்டிகை தினம் நெருங்குவதை முன்னிட்டு இன்று காந்திபுரம் டவுன் பேருந்து நிலையத்தில் தனது கைவரிசையை காட்டியுள்ளார் இவர். 

பேருந்துக்காக காத்திருந்த பயணியிடம் இருந்து 3 ரூபாய் சில்லறையை பிக்பாக்கெட் அடித்துவிட்டு ஓடினார். 

அப்போது அங்கு மப்டியில் இருந்த போலீசார் பிசி ராஜனை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். 

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், "பிசி ராஜனுக்கு பிக்பாக்கெட் தான் தொழிலாக உள்ளது. இதுவரை பலமுறை அவரை கைது செய்துள்ளோம். 24 முறை சிறைக்கும் அனுப்பியுள்ளோம். ஆனாலும், இதே பாணியில் பணம் சம்பாதிக்க முயற்சி செய்து வருகிறார்" என்றனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட பிசி ராஜனிடம் இருந்து செல்போன் மற்றும் 3 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையிலடைத்தனர். 

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...