ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு : போலீஸார் தீவிர கண்காணிப்பு

டிசம்பர் 21

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு, பணப் பட்டுவாடா புகார் காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இன்று மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தத் தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் உள்ளிட்ட 59 பேர் களத்தில் உள்ளனர். கடந்த சில தினங்களாக நடைபெற்ற தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தொடங்கின. 

அனைத்து வாக்குசாவடி மையங்களும் பதற்றமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் போலீசார், மற்றும் துணை ராணுவ போலீசார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் காலையிலேயே வாக்களிக்க ஆர்வத்துடன் வந்திருந்தனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 5 மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க வைக்கப்படும். மாலை 5 மணிக்கு பிறகு வாக்குச்சாவடி மையத்திற்கு பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த தொகுதியில் 1,10,903 ஆண் வாக்காளர்கள், 1,17,232 பெண் வாக்காளர்கள், 99 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,28,234 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 50 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்க போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். 

வாக்குப்பதிவு ‘வெப்’ கேமரா மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். ஏற்கனவே, வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பூத் சிலிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்கலாம். வாக்களிக்க செல்லும்போது புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையையோ அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களில் ஒன்றையோ எடுத்து சென்று வாக்களிக்கலாம்.

Newsletter

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...