புத்தாண்டு தினத்திற்கு தடை விதிக்கக் கோரி பீர் பாட்டிலுடன் வந்த பாரத் சேனா அமைப்பினர்

கோவை, டிசம்பர் 18

ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி பாரத் சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோவை நகரில் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் பல்வேறு நட்சத்திர விடுதிகளில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டு தின கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கக்கோரி பாரத்சேனா அமைப்பினர் பீர் பாட்டிலுடன் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். அப்போது, அங்குப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களிடம் இருந்த பாட்டில்களை கைப்பற்றினர். பின்னர், அந்த பாட்டில்களை பரிசோதித்த போது அதில் நீர் நிரப்பிக் கொண்டு வந்திருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, பாரத் சேனா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- இன்னும் சில தினங்களில் 2018 ஆம் ஆண்டு துவங்கவுள்ள நிலையில், வரும் 31-ம் தேதி தினம் இரவு இந்திய கலாச்சாரத்திற்கு எதிராகப் புத்தாண்டு என்ற போர்வையில் நடன நிகழ்ச்சிகள், மது விருந்துகள் உள்ளிட்டவை தனியார் விடுதிகளில் நடைபெறும். மேலும், நள்ளிரவில் வான வேடிக்கை, பொது இடங்களில் கூடுவது உள்ளிட்டவைகளும் நடைபெறும். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை நிர்வாகம் இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.



Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...