கோவை, டிசம்பர் 15
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர்கள் பயன்பெறும் வகையில் இருநாட்கள் நடைபெறும் ”எம்எஸ்எம்இ (MSME) - 2017” கண்காட்சி இன்று தொடங்கியது.
எம்எஸ்எம்இ எனப்படும் திறன் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் கோவை சிட்கோ இன்டஸ்ட்ரீஸ் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் இணைந்து ”எம்எஸ்எம்இ 2017” என்ற தலைப்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்தது. இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில், 80-க்கும் மேற்பட்ட சிறு தொழில் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சி குறித்து செய்தியாளர்களிடம் மத்திய கயிறு வாரியத் தலைவர் சிபி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், இது போன்ற கண்காட்சிகள் சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்களுக்குப் பெரிதும் பயனாக இருக்கும். என்றார்.