மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு, புதிய குறுந்தொழில் பேட்டைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.


Coimbatore: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில், இன்று நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல் மற்றும் சிவசண்முக குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.



கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், குறு மற்றும் சிறு தொழில் முனைவோர் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு மாதாந்திர நிலை கட்டணமாக கிலோவாட்டுக்கு ரூ.35 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது ரூ.165 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டது.

சுமார் 450 சதவீத கட்டண உயர்வு காரணமாக தொழில் முனைவோர் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும், எனவே தமிழக அரசு உடனடியாக மின்சார நிலை கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், மாநில வணிகவரி துறை 2007 முதல் 2022 வரையிலான பழைய கணக்குகளை கேட்டு ஆயிரக்கணக்கான தொழில் முனைவோருக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதம் விதித்து வருவது தேவையற்ற மனஉளைச்சலை ஏற்படுத்துவதாகவும், இந்த நடைமுறையை தமிழக அரசு தடை செய்து தொழில் முனைவோரின் நலனை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோவை குறிச்சி பகுதியில் 53 ஆண்டுகளுக்கு முன்பு தொழில்பேட்டை அமைக்கப்பட்ட பிறகு, உற்பத்தி சார்ந்த குறுந்தொழில் முனைவோருக்காக புதிய தொழில்பேட்டைகள் உருவாக்கப்படவில்லை என்றும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, கோவை நகரைச் சுற்றிய 25 கிலோமீட்டர் சுற்றளவில் அரசுக்கு சொந்தமான அல்லது விவசாயத்திற்கு பயன்படுத்தப்படாத நிலங்களை கையகப்படுத்தி, குறுந்தொழில் முனைவோருக்கென புதிய தொழில்பேட்டைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதேபோல், ஜாப் ஆர்டர் நிறுவனங்கள், வெட் கிரைண்டர், மோட்டார் பம்ப் மற்றும் கம்ப்ரசர்களுக்கு ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றும், தொழில்பேட்டைகள் அருகே செயல்படும் மதுபான பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழிலுக்கு தனி குறியீட்டு எண் வழங்கி, பிளாஸ்டிக் தொழில் உற்பத்தியாளர்களுக்கென தனி தொழில்பேட்டை அமைக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் போன்ற அரசுத் துறைகள் டெண்டர் விடும்போது தமிழகத்தை சேர்ந்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...