கோவை, டிசம்பர் 14
சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, தன்னை சிக்க வைத்ததாக நடிகை சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோவையில் வடவள்ளி பகுதியில் காற்றாலை அமைத்துத் தருவதாக ரூ.26 லட்சம் மோசடி செய்ததாக கேரள நடிகை சரிதா நாயர் மீது தொடரப்பட்ட வழக்கு கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக சரிதாநாயர் இன்று கோவை 6 -வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால், சாட்சிகள் வராததால், இந்த வழக்கு வரும் ஜனவரி 8-ஆம் தேதிக்கு நீதிபதி ராஜவேல் ஒத்திவைத்தார்.
இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கேரள சோலார் பேனல் வழக்கில் அரசியல் பிரமுகர்கள் உள்ளதால் விசாரணை தாமதமாக நடைபெற்று வருகிறது. கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டியால் தான் இந்த வழக்கில் நான் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். முழுமையான விசாரணை முடிந்து கண்டிப்பாக உம்மன்சாண்டி மற்றும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு கூறினார்.