வீட்டுப்பத்திரத்தை வைத்து மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை, டிசம்பர் 11

ரூ.40 லட்சம் மதிப்புள்ள வீட்டுப் பத்திரத்தை வைத்து மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



புலியகுளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, செளரிபாளையம் பகுதியைச் சேர்ந்த பாஸ்டான் என்னும் துணிக்கடை உரிமையாளர் ராஜேந்திரன் என்பவரிடம் வீட்டுப் பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சம் கடன் பெற்றேன். இதில், அசலும், வட்டியையும் சேர்த்து ரூ. 12 லட்சம் திரும்பச் செலுத்திய நிலையிலும், வீட்டுப் பத்திரத்தை தர அவர் மறுத்து வருகிறார். 

மேலும், ரூ. 40 லட்சம் மதிப்பிலான தனது வீட்டு பத்திரத்தில் தன்னை ஏமாற்றி கையெழுத்து வாங்கிய ராஜேந்திரன், அதனை முறைகேடாகப் பயன்படுத்தி கார்ப்பரேசன் வங்கியில் கடன் பெற்றுள்ளார். பத்திரத்தை திரும்பக் கேட்ட போது, தனது மகன் ஆல்வின் ஜெரால்டை அடியாட்களை வைத்துத் தாக்கினார். இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே, மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு பத்திரத்தை மீட்டுக் கொடுக்க ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...