வாய்க்காலில் மூழ்கிய கார் ; 3 பேர் பலி, ஒருவர் மீட்பு


கோவை, டிசம்பர் 10

உடுமலை அருகே பொள்ளாச்சி சாலையில் உள்ள  கெடி மேடு வாய்க்காலில் கார் விழுந்து விபத்து. இதில் ஒருவர் மீட்க்கப்பட்ட நிலையில் 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.



கேரளா மாநிலம் எர்ணாகுளம் அங்கவாரியை சேர்ந்தவர்கள் ஆல்பா (19), ஜூதின் ஜோய் (24), துபாய் ஜாக்சன் (21), அமல் (20), மற்றும் லி ஜோ (27). நண்பர்களான இவர்கள் கடந்த 7-ம் தேதி மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு மூணாறில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி நோக்கி காரில் வந்துள்ளனர். சுமார் காலை 7.15 மணியளவில் கெடி மேடு வாய்க்கால் அருகில் வரும் போது நிலை தடுமாறிய கார் பாலத்தில் மோதி வாய்க்காலில விழுந்தது. 

11 அடி ஆழமுள்ள வாய்க்காலில் மூழ்கிய காரில் இருந்து வெளியே வந்த ஆல்பா என்பவரை அங்கு குளித்து  கொண்டிருந்த பால் டேங்கர் லாரியின் டிரைவர் கார்த்திகேயன் என்பவர் காப்பாற்றி கரை சேர்த்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டனர் ஒருவரை தேடி வருகின்றனர். வாய்க்காலில் விழுந்த காரையும் மீட்டனர் இதனால் உடுமலை பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

 இச்சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...