கோவை, டிசம்பர் 10
உடுமலை அருகே பொள்ளாச்சி சாலையில் உள்ள கெடி மேடு வாய்க்காலில் கார் விழுந்து விபத்து. இதில் ஒருவர் மீட்க்கப்பட்ட நிலையில் 3 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் அங்கவாரியை சேர்ந்தவர்கள் ஆல்பா (19), ஜூதின் ஜோய் (24), துபாய் ஜாக்சன் (21), அமல் (20), மற்றும் லி ஜோ (27). நண்பர்களான இவர்கள் கடந்த 7-ம் தேதி மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 4.30 மணிக்கு மூணாறில் இருந்து கிளம்பி பொள்ளாச்சி நோக்கி காரில் வந்துள்ளனர். சுமார் காலை 7.15 மணியளவில் கெடி மேடு வாய்க்கால் அருகில் வரும் போது நிலை தடுமாறிய கார் பாலத்தில் மோதி வாய்க்காலில விழுந்தது.
11 அடி ஆழமுள்ள வாய்க்காலில் மூழ்கிய காரில் இருந்து வெளியே வந்த ஆல்பா என்பவரை அங்கு குளித்து கொண்டிருந்த பால் டேங்கர் லாரியின் டிரைவர் கார்த்திகேயன் என்பவர் காப்பாற்றி கரை சேர்த்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் 3 பேரின் உடல்களை மீட்டனர் ஒருவரை தேடி வருகின்றனர். வாய்க்காலில் விழுந்த காரையும் மீட்டனர் இதனால் உடுமலை பொள்ளாச்சி சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இச்சம்பவம் அங்குள்ள மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.