கோவை, டிசம்பர் 10
கோவையில் வங்கி ஏ.டி.எம்.இயந்திரத்தை உடைத்து 3 லட்சத்து 25 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கோவை டைடில் பார்க் பகுதியில் இருந்து விலாங்குரிச்சி செல்லும் வழியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது.
இந்த ஏ.டி.எம். மையத்தில் நேற்று நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் ஏ.டி.எம்.ஐ உடைத்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.
இது குறித்து, தகவலறிந்த வங்கி நிர்வாகம் பீளமேடு போலீசாருக்கு தகவல் அளித்தது. தகவலின் பேரில் சமபவ இடத்திற்கு சென்ற பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.