கோவை கடற்படையை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தபெதிக-வினர் கைது


கோவை, டிசம்பர் 09

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களைப் பாதுகாக்கத் தவறிய இந்திய கடற்படையைக் கண்டித்து ரெட் பீல்ட்ஸ் சாலையிலுள்ள கடற்படை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தைப் பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.



ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போகியுள்ளனர். இவர்களைக் காப்பாற்ற தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், அவினாசி சாலையில் இருந்து கப்பற்படை அமைந்துள்ள சாலையில் பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர். 

அப்போது, மீனவர்களைக் காப்பற்ற மத்திய, மாநில அரசு தவறி விட்டதாகவும், பத்து நாட்கள் ஆகியும் முழுமையாக மீனவர்களை மீட்க முடியாத மத்தியஅரசு, கப்பற்படையை இழுத்து மூட வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பினர்.



மீனவர்களைக் காப்பாற்றத் தவறிய மத்திய அரசு, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பேரிடர் மாவட்டமாக அறிவிக்க மறுத்து வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார். தமிழ்ஈழப் படுகொலை நடந்த போது இலங்கைக்குப் போர் கப்பல் கொடுத்த மத்திய அரசு, மீனவர்களைக் காப்பாற்ற முன் வரவில்லை என்றும், மாநில அரசு இறந்த மீனவர்களுக்கு ரூ. 20 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். 

இதனிடையே, குஜராத் மீனவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் மத்திய அரசு, இது ஜனநாயக நாடு சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் பாகுபாடு பார்க்கக்கூடாது எனத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் தெரிவித்தார்.

Newsletter

நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையி...

Prioritise Safety Measures: Salem ADRM Urges During Inspection at Tiruppur Railway Station

Salem Additional Divisional Railway Manager (ADRM) R. Saravanan inspected the ongoing Amrit Bharat Scheme works and main...

பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் - திருப்பூரில் சேலம் கூடுதல் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு..!

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த சே...

சனாதன சர்ச்சை: உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூவர் மீது நடவடிக்கை கோரி கோவையில் இந்து மக்கள் கட்சி புகார்

மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, உதயநிதி ஸ்டாலின், தவெக எம்.எல்.ஏ முஸ்தபா மற்றும் காங்கிரஸ் நிர்வாகி...

707 Kg of Banned Gutka Products Seized in Palladam; Two Arrested

Palladam police seized approximately 707 kilograms of banned gutka products allegedly transported from Karnataka into Ta...

பல்லடத்தில் 707 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்; இருவர் கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 707 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர...