கோவை, டிசம்பர் 5
பராமரிப்புப் பணிகள் காரணமாக பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் நாளை ஒருநாள் (டிச. 6) குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்பட்டு வரும் பில்லூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வெள்ளியங்காடு அருகே சுத்த நீர் கொணரும் குழாயில் அவசர பராமரிப்புப் பணிகள் டிசம்பர் 6ம் தேதியன்று நடைபெறவுள்ளது. இதனால், இத்திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் கோவை மாநகராட்சி பகுதிகள், பல்லடம் நகராட்சி, 18 பேரூராட்சிகள் மற்றும் 920 வழியோர கிராம குடியிருப்புகளுக்கு நாளை காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை குடிநீர் விநியோகம் தடைபடும்.
எனவே, உள்ளாட்சி நிறுவனங்களும், பொது மக்களும் தங்கள் உள்ளூர் நீராதாரங்கள் மூலமாக மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ளுமாறு பில்லூர் பராமரிப்புக் கோட்ட நிர்வாகப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.