கோவையில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டு தற்கொலை


கோவை, டிசம்பர் 5

கோவையில் பொறியியல் பட்டாதாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். 

கோவில்பாளையத்தை அடுத்த கோட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். அரசு பேருந்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.  இவரது மகன் முகேஷ் (26). பொறியியல் பட்டதாரியான இவர் கோவை அரசு தொழில் நுட்ப கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்த முகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

பணி முடித்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் , மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் கோவில் பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகேஷ்-ன் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் முகேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தக்காளி மற்றும் கற்றாழை மதிப்பூட்டல் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவையில் தக்காளி மற்றும் கற்றாழையிலிருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் இரண...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

மலுமிச்சம்பட்டி அரசு இசைக் கல்லூரியில் பட்டம், பட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மலுமிச்சம்பட்டி தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், பரதநாட்டியம், நாதஸ்வரம், தவில் உள்ளிட்...

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...