கோவை, டிசம்பர் 5
பவானி ஆற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
அன்னூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் கோகுல்ராஜ் (20), அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவரது மகன் குகன் (20). கல்லூரி மாணவர்களான இவர்கள் இருவரும் நேற்று மதியம் பவானி ஆற்றில் குளிப்பதற்காக அன்னூரில் இருந்து சிறுமுகையை அடுத்த பழந்தோட்டம் பாலம் அருகே குளிக்கச்சென்றனர்.
நீண்ட நேரம் ஆகியும் வீடுதிரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர் சம்பவ இடத்திற்குச் சென்று மாயமானவர்களை தேடினர்.
அப்போது அவர்கள் வந்த இருசக்கர வாகனம் மற்றும் செல் போன்கள் ஒரு பகுதியில் இருந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மாணவர்கள் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் சிறுமுகை போலீசார் விசாரணை நடத்தினர். உடனடியாக மாணவர்களை தேடும் பணி நடைபெற்றது.
தற்போது (9:00 am) வாகனம் நிறுத்தப்பட்ட பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் குகனின் உடல் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, கோகுல் ராஜ்-ன் உடலை தேடும் பணி நடைபெற்ற்ய் வருகிறது.