வெள்ளப் பெருக்குக் காரணமாக குரங்கு அருவியில் குளிக்கத் தடை

கோவை, நவம்பர் 30

தொடர் மழைக் காரணமாக குரங்கு அருவி, பஞ்சலிங்க அருவிகளில் குளிக்கச் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே 2 நாட்களுக்கு முன் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், ஆழியார் – வால்பாறை சாலையில் உள்ள குரங்கு அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதேபோல, திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள பஞ்சலிங்க அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

இன்று நள்ளிரவு பெய்யும் மழையின் அளவைப் பொறுத்தே, நாளை அருவிகளைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

Newsletter

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...