கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின்

கோவை, நவம்பர் 30

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் தம்பி மகள் வித்யாவின் மறைவையடுத்து, கோவையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்று குடும்பத்தினருக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். 

கோவை வந்த அவர், ஜி.வி.ரெசிடென்சியில் உள்ள திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிச்சாமியின் வீட்டிற்குச் சென்று, அண்மையில் காலமான வித்யாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், பொங்கலூர் பழனிச்சாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் பைந்தமிழ்பாரி, வித்யாவின் கணவர் டாக்டர். கோகுல் ஆகியோரிடத்தில் துக்கம் விசாரித்தார். 



இதைத்தொடர்ந்து, கோவை திருச்சி சாலை ருக்மணி நகர்ப் பகுதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.மோகன் மற்றும் ராஜவீதியில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.இராமநாதன், ராம் நகரில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.ரா.சுப்பையன் ஆகியோர் இல்லங்களுக்குச் சென்று நலம் விசாரித்தார். 



முன்னதாக, கோவைத் தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால், அனுமதிக்கப்பட்டிருந்த மாநகர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கார்த்திக் செல்வராஜின் மகன் கார்த்திக்கை சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின்போது, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், பொன்முடி, இராமச்சந்திரன், திமுக மாநில இளைஞரணி செயலாளர் வெள்ளகோவில் சாமிநாதன், மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர்கள் சி.ஆர்.இராமசந்திரன், தமிழ்மணி, முபாரக், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன், ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...